Sunday, September 22, 2013

காயசித்தி தரும் சதுரகிரி மலையின் மூலிகைகள்

சதுரகிரி மலையில் நிறைந்திருக்கும் மூலிகைகளின் அருமை பெருமைகள் சித்தர்களின் பாடல்களில் விரிவாக கொட்டிக் கிடக்கின்றன.அவற்றை தனியே தொகுத்து ஆய்வுகள் மேற் கொண்டிருந்தால் சித்த மருத்துவம் இன்னேரத்துக்கு உலகின் முதன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றாக திகழ்ந்திருக்கும். அத்தகைய பொன்னான வாய்ப்பினை  நாம் தவற விட்டுவிட்டோமோ என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. இப்போது கூட காலம் தாழ்ந்து விடவில்லை. தமிழக அரசும்,இந்த துறையில் ஆர்வமுள்ளோரும் கை கோர்த்தால், நமது சித்தர்களின் அரிய தெளிவுகளை மனிதகுலத்தை உய்விக்க பயன்படுத்திட முடியும்.

இன்று காயசித்தி அளிக்கும் மூன்று மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

வனபிரம்மி

வெண்ணாவல் மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து வலது பக்கத்தில் வனபிரம்மி என்னும் மூலிகை இருக்கிறது. இது கொடியாகப் படர்ந்து இருக்கும். இதன் இலை நெல்லியிலை போல தடிப்பாக இருக்குமாம். இந்த மூலிகையை ஞாயிற்றுக் கிழமையன்று சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரைக் கொண்டு வந்து சூரணித்து முப்பது நாட்கள் புளித்த காடியில் கலக்கி உட்கொள்ள காயசித்தியாகுமாம்.

முப்பிரண்டை

மேலே சொன்ன வனபிரம்மி கொடி யிருக்கும் இடத்திற்க்கு பக்கத்தில் முப்பிரண்டை இருக்கிறதாம்.இது சாதாரன பிரண்டை போல முப்பட்டையாக இருக்குமாம்.இதைக் கொண்டுவந்து சாறு எடுத்து சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டுமாம்.உடனே அதையெடுத்து நாகத்துடன் இணைக்க நாகம் கட்டும். நாகம் சூதம் இந்த இரெண்டும் சேர்ந்த கலவையின் எடைக்கு சம எடை கெந்தி சேர்த்து இதே முலிகையின் சாறுவிட்டு அரைத்து புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை சாப்பிட்டுவர காயசித்தி கிடைக்குமாம்.

குருவரிக்கற்றாளை

சதுரகிரியின் வடபாகத்தில் குறுவரிக் கற்றாளை என்று ஒரு மூலிகை இருக்குறதாம். அது பெருவிரல் பருமன் இருக்குமாம். ஒன்றரைச் சாண் உயரம் மட்டுமே வளருமாம். குறுக்கே வரிவரியாக வரிகள் காணப்படுமாம். இதற்க்குச் சாப நிவர்த்தி செய்து வேரை எடுத்துவந்து இடித்துச் சாறேடுத்து இரும்பை மெல்லிய தகடாகத் தட்டி இந்த சாற்றில் ஊறவைத்து எடுக்க அது தாமிரமாக மாறி இருக்குமாம். அதை செந்தூரம் செய்து உண்ண காய சித்தி உண்டாகுமாம்.

Nifty Technical Chart - Follow Up


Now as such nifty is not in sell mode effectively.  

Moreover - Nothing has changed in India and economic status remains weak.

We go as per our system.