கிரகணம் என்பது தோஷமல்ல அதனை அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும், வெறும் கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கிரகணம் என்றால் என்ன என்பதை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
காலம் காலமாக புரையோடி இருக்கும் மூடநம்பிக்கைகளில் இருந்து இளம் தலைமுறையினரை அறிவியல் ரீதியாக சிந்திக்க வைக்க வேண்டியதும் பெற்றோர் செய்ய வேண்டியதே.
அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் வானியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக அறிவியல் இயக்கம் சார்பில் விளக்கக் கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வளர் தலைமுறையினருக்கு கிரகணம் தொடர்பான புரிதலை ஏற்படுத்த பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சரியான முறையில் அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்
அறிவியல் ரீதியாக ....புரிதலை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் .....
ராயபுரம் மற்றும் திருவான்மியூர் கடற்கரையில்....
மாலை 6 முதல் 9 மணி வரை...