தொடு சிகிச்சை என்பது புதிய மருத்துவ முறை
அல்ல. அக்குபங்சர் என்ற மருத்துவத்தின் சிகிச்சை
முறைதான் தொடுதல். அக்குபங்சர் என்றாலே உடல் முழுவதும் ஊசிகளைச்
சொருகி, மின் தூண்டல் கருவிகளை இணைக்கும் ஒரு காட்சிதான் நம் நினைவிற்கு வரும். ஆனால் அக்குபங்சர்
மருத்துவத்தின் அடிப்படையான முறை விரல் மூலம்
அக்குபங்சர் புள்ளியைத் தொட்டு தூண்டுவதுதான்.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு முக்கியமான உள்ளுறுப்பிற்கும் தனித்தனியான சக்தி ஓட்டப்பாதைகள் அமைந்துள்ளன. இப்பாதைகளில்தான் அக்குபங்சர் புள்ளிகள் அமைந்துள்ளன. இப்புள்ளிகள் தோல் மூலம் சுவாசித்து உள்ளுறுப்புக்களுக்குத் தேவையான சக்தியை வழங்குகின்றன. இப்படி தோலில் அமைந்துள்ள புள்ளிகளின் மூலம் சுவாசம் முழுமையாக நடைபெறும் போது உடலில் தொந்தரவுகள் தோன்றுவதில்லை. நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்களால் உள்ளுறுப்புக்களில் கழிவுகள் தேங்குகின்றன. அவ்வாறு கழிவுகள் தேங்கிய உறுப்புக்களால் தோலின் மூலம் முழுமையாக சுவாசிக்க முடிவதில்லை. எந்த உறுப்பு பலவீனம் அடைந்துள்ளதோ அது சார்ந்த சக்தி ஓட்டப்பாதையும், புள்ளியும் இயங்குவதில் குறைபாடு ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் நாம் உடலில் தொந்தரவுகளை உணர்கிறோம்.
உண்மையில் அக்குபங்சர் எந்த ஒரு நோயையுமே குணப்படுத்துவதில்லை. அக்குபங்சர் புள்ளியைத்தூண்டும் போது உடல்
தனக்குத் தேவையான சக்தியைப்பெறுகிறது. பின்பு
தன்னைத்தானே அது குணப்படுத்திக் கொள்கிறது. உடலே குணப்படுத்திக்
கொள்ளும் என்பதால் எவ்வகையான நோய்களை குணப்படுத்தும் என்ற கேள்வியே
எழாது. ஏனென்றால் நம் பழக்கவழக்கங்களால் உடலின்
மாறுபாட்டால் நோய்கள் உருவாகின்றன. எதிர்ப்பு சக்தி உயர்ந்து பலம் பெற்று அந்நோய்க்கான காரணங்களை உடலே வெளியேற்றுகிறது. உடலால் ஏற்பட்ட நோய்கள் உடலாலேயே சரி செய்யப்படுகின்றன. எனவே எல்லா விதமான
நோய்களையும் உடலால் தீர்த்துக் கொள்ள முடியும்.
நட்பு முறையில், துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு, தொடு
சிகிச்சை பற்றி, ஓர் விழிப்புணர்வு வகுப்பு, அடுத்த வாரம் சனிக்கிழமை-29.11.2014 (இலவச
வகுப்பு), நம்முடைய சந்தாரர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளோம்.
கலந்துகொள்ள விரும்பம் உள்ளவர்கள், தொலைபேசியில்
தொடர்பு கொள்ளவும்.