Monday, March 23, 2020
Bank Nifty
Bank nifty next solid support posted in the hangout...
Please read and do analysis at your end and act...
அப்பல்லோ மருத்துவமனை
கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தீர்க்கவும் அந்த தொற்றுநோயின் முதற்கட்ட அறிகுறிகளை தெரிந்து கொள்ளவும் அப்பல்லோ மருத்துவமனை இந்த இணைய கவுன்சிலிங் வசதியை துவக்கியுள்ளது.
கட்டுரையாளர் திரு பாலசுந்தர் ராமசந்திரன்
Balasundar Ramachandran
வைரஸ்- Demystified
லதா மேடம் ஆடியோக்கள் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில்,
இதை எழுதாமல் விடுவது அறமல்ல என்பதாலேயே இதை எழுதுகிறேன்...
இதை எழுதாமல் விடுவது அறமல்ல என்பதாலேயே இதை எழுதுகிறேன்...
முதலில் வைரஸ் என்பது நுண்ணுயிரி என்று எழுதுவதே தவறு...பாக்டீரியா, பூஞ்சை போன்ற Micro Organisms தானாகவே உகந்த சூழலில் பல்கிப் பெருகும் தன்மையுடையவை...
ஆனால், வைரஸ்கள் பல்கிப் பெருக உயிருள்ள செல்கள் அவசியம்... அதுவரை வைரஸ் என்பது சாதாரண மரபணு செய்திகள்(Genetic Material) பொதிக்கப்பட்டு புரதங்களாலும், சில மென் கொழுப்பினாலும்(lipids) சுற்றப்பட்டு இருக்கக் கூடிய ஒரு Bio Substance மட்டுமே...
ஆக, வைரஸ்கள் அதன் Carrier செல்களுடன் இருக்கும் போது உயிருள்ளவையாகவும் பிரச்சினைக்குரியதாகவும், எந்த ஒரு உயிரினத்தோடும் தொற்றாமல் இருக்கும் போது சாதாரண எந்த ஒரு பிரச்சினையும் செய்யாத Sleeper Cell-களாக மட்டுமே இருக்கும்...
ஒவ்வொரு வைரஸும் அதன் பரவல் சுழற்சியில், ஏதேனும் ஒரு உயிரியின் (அது பறவைகளாக, பாலூட்டிகளாக, மனிதனாக, ஏன் பாக்டீரியாவாகக் கூட) செல்களைச் சார்ந்து பல்கிப் பெருகுகிறது. அதிலிருந்து இன்னொரு உயிரியின் செல்களைத் தேடித் தொற்றிப் பரவுகிறது...
இதை எதிர்க்க இயற்கை அளித்த ஒரு கொடையான அமைப்பாக நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ளது... அதாவது நம் உடலைச் சாராத அந்நிய செல்கள் உள் நுழையும் போது, Antibodies எனப்படும் நோய் எதிர்ப்பு புரதம் உருவாகி அது அந்த அந்நிய செல்களில் மேல் ஒட்டி அடையாளம் காட்டும்.. உடனே CD4+ எனப்படும் நம் உடலின் வெள்ளையணுக்கள் அவற்றை அழிக்கும்...
இது இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை உங்கள் உடலினுள் நடந்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வு...
ஆக, ஒரு வைரஸ் உடலில் நுழைந்து, செல்களின் மேல் அதன் புரதத்தை ஒட்டி அமர்ந்து, அதன் DNA-வையோ, RNA-வையோ உட்செலுத்தி, செல்கள் பல்கிப்பெருகும் அதே முறையில் சக வைரஸ் செல்களாகப் பிரதியெடுக்கின்றன... அந்த பிரதியெடுக்கப்பட்ட வைரஸ்கள் அடுத்த செல்களைத் தாக்குகின்றன.. இதுதான் வைரஸின் ஆபத்தான ஒரு செயல்...
இங்கே நம் உடலின் வெள்ளை அணுக்கள் குழம்பி விடுகின்றன.. அதற்கான நோய்எதிர்ப்பு செல்கள் உருவாகத் தாமதமாகின்றன... ஒவ்வொரு வைரஸும் பல்கிப் பெருகி உடலில் நோயை ஏற்படுத்தி, அதன் பின் அந்த வைரஸை நோய்எதிர்ப்பு மண்டலம் தாக்கி அழித்த பின் அந்த வைரஸைப் பற்றி ஞாபகசக்தியை (Cognition) நம் நோய் எதிர்ப்பு மண்டலம் பெறுகிறது... ஆக, அடுத்த முறை அந்த வைரஸ் உள்நுழையும் போது நம் நோய் எதிர்ப்பு மண்டலம் உடனே தாக்கி வைரஸை அழிக்கிறது....
பெரியம்மை, போலியோ, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட அத்தனை வைரஸ் தடுப்பூசி (Vaccination)களிக்கும் மேற்சொன்ன வழிமுறையே அடிப்படை.. அதாவது, வைரஸ் உடலில் தாக்கும் முன்னேயே அதன் தன்மைகளும், மரபணு செய்தியும் கொண்ட வைரஸின் அடையாளத்துடன் கூடிய வீரியம் குறைக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி, நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி விடுவது... அதனால் Carrier Chain அறுபட்டு அந்த வைரஸ் பரவல் தடைபட்டு, Sleeper Cell-களாகவே இருப்பது... இதைத்தான் பெரியம்மைக்கான தடுப்பூசியில் எட்வர்ட் ஜென்னர் சாதித்தார்...
ஆக ஒரு வைரஸுக்கான தடுப்பூசி தயாரிக்க அது பற்றிய முழு தகவல்களும் நமக்கு அவசியம்.. அதன் அமைப்பு, புரதம், மென் கொழுப்பு படலம், மிக,மிக,முக்கியமாக அது DNA அல்லது RNA வகை மரபணு செய்தியை (Genetic Material) கொண்டிருக்கிறதா என்பது...
இதில் DNA வகை வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டறிவது மிகவும் சுலபம்.. பெரியம்மை, தட்டம்மை வைரஸ்கள் போன்றவை... ஏனென்றால், அதன் Genetic Structure and order என்னும் மரபணு ஒழுங்கு மாறுபாடு அடையாத வண்ணம் அந்த வைரஸ்களில் ஒரு பாதுகாப்பு உண்டு.. அதனால், பல்லாயிரம் வருடங்களாக DNA வைரஸ்களின் மரபணு செய்தியில் மாற்றம் ஏற்படாததால் நம்மால் எளிதாக தடுப்பூசி தயாரிக்க முடிகிறது....
ஆனால் RNA வகை வைரஸ்களே மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துகின்றன... HIV, Ebola, SARS, Influenza, Cold Virus முதல் தற்போதைய nCoVID-19 என்னும் கொரானா வைரைஸ் வரை RNA வைரஸ்களே...
இந்த RNA வைரஸ்களின் மரபணு செய்தி வரிசை arbitrary ஆக செல் பிரதியெடுக்கும் போது மாறக் கூடியது.. அதையே Mutation என்கிறோம்... ஆக, ஒரு முறை தடுப்பூசி உருவாக்கி நம் உடலில் செலுத்தினாலும், Mutate ஆகி அடுத்து வரும் வைரஸை அது எதுவும் செய்யாது... இதில்தான் பெரும் சிக்கலும் வருகிறது....
இந்த RNA வைரஸ்களின் மரபணு செய்தி வரிசை arbitrary ஆக செல் பிரதியெடுக்கும் போது மாறக் கூடியது.. அதையே Mutation என்கிறோம்... ஆக, ஒரு முறை தடுப்பூசி உருவாக்கி நம் உடலில் செலுத்தினாலும், Mutate ஆகி அடுத்து வரும் வைரஸை அது எதுவும் செய்யாது... இதில்தான் பெரும் சிக்கலும் வருகிறது....
ஆக ஒவ்வொரு முறையும் RNA வைரஸால் நோய்வாய்ப்பட்டு, நம் நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்த்துப் போராடி அதை வென்று நம் உடலைக் காக்கிறது.. அடுத்த முறை அதே வைரஸ் வேறொரு Mutated RNA உடன் வந்து நோயை ஏற்படுத்துகிறது...
இதில் ஏன் HIV வைரஸ் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது என்றால், HIV வைரஸ் உள்நுழைந்து தாக்கியழிப்பதே CD4 என்னும் வெள்ளையணுக்களாக இருப்பதால், Antibodies அடையாளம் காட்டினாலும், அவற்றை அழிக்க யாரும் இருப்பதில்லை... ஆக, பிற நோய்களுக்கான வைரஸ்களுக்கான பணியை HIV எளிதாக்குகிறது...
Antiretroviral போன்ற மருந்துகளும் தற்காலிக நோய் எதிர்ப்பு சக்தி அளித்து வைரஸ் பரவலைத் தடுக்குமே தவிர RNA வைரஸ்களுக்கு முழுமையான மருந்து கிடையவே கிடையாது... மருத்துவமனையில் கூட அந்த வைரஸ்களால் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறார்களே தவிர, அந்த வைரஸுக்கு அல்ல...அதனால்தான் காய்ச்சலுக்கு வலிநிவாரணியான பாரசிட்டமால் அளிக்கிறார்கள்...
பென்சிலின் முதலான Antibiotics மருந்துகள் பூஞ்சைத் தொற்றுக்கும், பாக்டீரியா தொற்றுக்குமான மருந்தே தவிர, வைரஸ்களுக்கான மருந்து அல்ல..
நாமதான் வேப்பிலையை பயன்படுத்தினோமே, நிலவேம்பு, கீழாநெல்லியைப் பயன்படுத்தினோமே என்றால், வேப்பிலை என்பது பெரியம்மை நோய்க்கட்டிகளுக்கான கிருமி நாசினியாக இருந்து அந்தப் புண்களை ஆற்றியிருக்குமே தவிர, வைரஸை ஒன்றும் செய்திருக்க முடியாது... நம் நோய் எதிர்ப்பு மண்டலமே ஒரே தீர்வு...தடுப்பூசி என்பது வருமுன் தீர்வு... அவ்வளவே...
இந்த கொரானா வைரஸ் ஒரு மரபணு mutate ஆன விலங்கிலிருந்து தொற்றிய RNA வைரஸ்.. இது இன்னும் mutate ஆகலாம்.. நம்மிலிருந்து விலங்குகளுக்கோ பறவைக்கோ தொற்றலாம்.. இது ஒரு சங்கிலித் தொடர்...
நாளையே HIV வைரஸின் RNA mutate ஆகி அது காற்றிலேயே பரவக்கூடிய வல்லமையைப் பெறலாம்.. Who Knows? நம்மிடமிருந்து பிற விலங்கினங்கள் HIV பெறலாம்....
வைரஸ் தொற்றுவதைத் தடுக்க மட்டுமே இப்போது வழிகள் உண்டு... தொற்றியபின் குணப்படுத்த நம் நோய் எதிர்ப்பு மண்டலமே ஒரே வழி....
வாட்ஸ் அப் வதந்திகளை விட நல்ல, நல்ல அறிவியல் வெப்சைட்டுகள், டாகுமெண்ட்டரிகள் ஆன்லைனில் உள்ளன.. அவற்றைப் பாருங்கள்.. தெளிவடையுங்கள்...
Crude
Crude trend is weak.....
As posted (the details) in the hangout....wait for bottom level.... read the chart at your end and do analysis and act...
No hurry.... either bottom or reversal ...
Till then... trend is weak...
Index
No question of bottom fishing and "hold"...... trend still weak...
This week also... reversal not visible on the charts....
Extension of levels shifted to 8th April 2020...
Take care...
Subscribe to:
Posts (Atom)