Colgate is in our List.....
We are going to rock in Colgate for sure...
Our Indore Bull is active in Colgate ....
கோல்கேட் பேஸ்ட் 30 ஆண்டுகளாக செய்த ஏமாற்றுத்தனம்
“உடம்புக்கு பாலும் பாதாமும். பல்விளக்க உப்பும் கரித்தூளுமா?” எனக் கேட்டு, கோல்கேட் டூத்பவுடரை பயன்படுத்தும்படி அந்தக் குரல் பரிந்துரைக்கும். உப்பும் கரித்தூளும் வேஸ்ட். கோல்கேட் டூத்பவுடரும் டூத்பேஸ்ட்டும் சிறந்தவை என்றும் நல்ல பலன்தரக்கூடியவை என்றும் விளம்பரம் செய்து, சந்தையை ஆக்கிரமித்து, வியாபாரத்தைப் பெருக்கிய அதே கோல்கேட் நிறுவனம்தான், உப்பு பேஸ்ட்டையும் கரித்தூள் பிரஷ்ஷையும் இப்போது வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்கிறது.
30 ஆண்டுகளுக்கு முன் உப்பையும் கரித்தூளையும் தவிர்க்கச் சொன்ன கோல்கேட், இப்போது அந்த இரண்டையும் வைத்து பல் துலக்கச் சொல்கிறது.