இதுதான் மஹாசிவராத்திரி அன்று விழிப்பு நிலையில் செய்யவேண்டியது... (அன்பே சிவமென்று அமர்ந்திரு)
”அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. ”
—-திருமூலர்
======================================
சித்தர்கள் அறிவியல் கண்ணோட்டத்தோடு கூறியிருப்பது,,,சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக்
கடந்தவை,மதம் என்னும் மாயப் பிடியில்
சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும்,
தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும்
உணர்ந்து வெளிப்படுத்திய
ஆய்வு செய்யப்படவேண்டிய கருத்துக்களைத்
திரித்து ஒரு சமய
சட்டத்திற்கு மட்டுமே உரியதாக
மாற்றிவிட்டனர்.
அனுத்துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின்
அனைத்து இரகசியங்களையும் அவர்கள்
தத்தம்
நூல்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றை நாம் ஆய்வுக்குட்படுததாமல் சமயம் சார்ந்த கோட்பாடுகளில்
இவர்களைக் கட்டிப் போடுவது அழகல்ல.
இந்தபிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான
கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள்
நம்மை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன.
இத்தகைய கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்த
சித்தர்கள் தம் யோக வலிமையினால் இந்த
ரகசியங்களை அறிந்து வெளிப்படுத்தினார்கள்.
தினமும் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான
கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள்
நம் பூமியை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன.
மஹா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட
கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின்
கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும்
மிக அதிகமாக வியாபித்துக் காணப்படும்...
அன்று நாம் உயர்ந்த விழிப்பு நிலையில் இருந்து அதிர்வுகளை உள்வாங்கினால் .. உடலிலும் / ஆழ்மனதிலும் மிக பெரிய மாற்றம்களை விழப்பு நிலையில் இருந்தால் ஏற்படுத்தமுடியும்..
மஹா சிவ ராத்திரி அன்று, வழக்கமான தாமச குணத்தில் இருந்து விடுபட்டு (தூக்க நிலை) விழிப்பு நிலை அடையவே நாம் உறங்காமல் இருந்து அதிர்வுகளை உணர முயற்சிக்கிறோம்.
வெறுமனே, உறங்காமல் இருத்தல் என்று அதற்கு பொருள் அல்ல..
அன்றைய தினம்...உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல்,
உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக
மேன்மை ஏற்படும்.
உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது.
===========================================
இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும்,
கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும்செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
(சினிமா படம் பார்ப்பது, கேம்ஸ் விளையாடி உறங்காமல் இருப்பது, வெட்டி அரட்டை அடித்து நேரத்தை கடத்துவது என்பது விரதத்தின் எந்த வகையிலும் சேர்த்தி கிடையாது.)
சில பொறுக்கி ஆன்மீகவாதிகள் போதைல பெண்களோடு நடனமும் ஆடிக்கிட்டு இருக்கானுங்கோ...
வீட்டு பெண்கள் சிவராத்ரி என்ற பெயரில் நடு ராத்திரியில் பொது இடத்தில் ஆடுவதை ரசிக்கும் மனோநிலை பொறுக்கி தனத்தின் உச்சம்...
திருந்துங்கடா