இரும்பினை செம்பாக்கும் இந்த தகவல் கோரக்கர் அருளிய "கோரக்கர் மலைவாகடம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. சதுரகிரி மலை தொடர்பான தொடரில் இந்த தகவலை பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.
தேவையான பொருட்கள்: மெல்லிய இரும்பு கம்பி/ இரும்பு ஊசி, கல் தாமரையின் வேர்.
இரும்பு ஊசி எளிதில் கிடைத்தாலும், கல்தாமரை வேருக்காக பல இடங்களில் தேடி அலைய வேண்டியதாயிற்று. ஒரு வழியாக நீர்கொழும்பு பகுதியில “குடபாடு” என்னும் பகுதியில் கிடைத்தது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. ஒரு பௌர்ணமி நாளில் சூரிய உதயத்திலிருந்து மூன்று நாழிகைக்குள் கல்தாமரை / கற்றாமரை மூலிகைச் செடிக்குக் சாபநிவர்த்தி செய்து அதன் வேரினை சேகரித்துக் கொண்டு வந்தேன். (This is most important part of the process)....
இனி செயல் முறையினை பார்ப்போம். இரும்பு ஊசியின் மேற்பரப்பை தேய்த்து சுத்தம் செய்து, நன்கு பழுக்க சூடேற்றிய பின்னர் அதனை அப்படியே ஆற விடல் வேண்டும். ஆறிய பின்னர் அந்த ஊசியினை கல்தாமரை வேரில் கவனமாய் சொருகி வைக்க வேண்டும். மூன்று சாம நேரத்திற்கு பின் (After Nine Hours) அந்த ஊசியை எடுத்தால் அது செம்பாக மாறியிருக்கும்.
Source : Internet
link : http://www.siththarkal.com/2013/02/Alchemy.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.