Article - Hindu Tamil..
....Matured Speech...(no politics)..
அவர் கூறும்போது, “பாதுகாப்பற்ற லாக்டவுனினால் வைரஸ் இன்னமும் இருந்து வருவதைத்தான் உறுதி செய்துள்ளோம். அன்லாக் செய்யும் போது மீண்டும் அது தாக்கும். எனவே நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. கரோனா வைரஸ் கிருமி தொற்று வளைகோட்டை நீங்கள் தட்டையாக்கவில்லை மாறாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி என்கிற தவறான வளைகோட்டை தட்டையாக்கி விட்டீர்கள்.
ஒரு பக்கம் முழு அடைப்பு என்கிற லாக் டவுன் முறை. இது காற்றுபுகா முழு அடைப்பு. இது உலகில் எங்குமே நடக்கவில்லை. காசநோய், வயிற்றுப்போக்கு, நிமோனியா நோய்கள் இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகளின் உயிர்களைப் பறித்து வருகிறது. ஆனால் கரோனாவுக்காக லாக்டவுன் இப்போதுதான் முதல் முறை. வளர்ந்த நாடுகளின் இதயத்தைத் தாக்கியுள்ளது கரோனா. பணக்காரர்களும் பிரபலமானவர்களும் பாதிக்கப்படும்போது தலைப்புச் செய்திகள் பெரிதாக இருக்கும்.
இந்தப் பிரச்சினை தொடங்குவதற்கு முன்பாக யாரோ ஒருவர் கூறினார் ‘ஆப்பிரிக்காவில் தினசரி 8,000 குழந்தைகள் பட்டினியினால் மடிவதாக’ சிவில் சமூகத்தில் நாம் ஒரு புள்ளிக்கு மேல் இதையெல்லாம் பார்ப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. இது பற்றியெல்லாம் நமக்கு தெரியாமலேதான் இருக்கிறது. கரோனா பரபரப்பானதற்குக் காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள செல்வம் மிகுந்த மக்கள் இதில் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான்.
மேலும் நாம் உண்மைகளை, தரவுகளை வெளியிடுவதிலும் குறைபாட்டுடன் இருக்கிறோம். இந்த தொற்று கேன்சர் போன்றது குணமடைய நீண்ட காலம் ஆகும் என்றுதான் மக்களில் பலர் நினைத்து வருகின்றனர். இந்தியா இந்தப் பிரச்சினையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது, நீந்திதான் கரை சேர வேண்டும்” என்றார் ராஜிவ் பஜாஜ்.
- ஹிந்து தமிழ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.