சைவத்திற்கு மேல் வேறு சமயம் இல்லை...
பொருநராற்றுப் படைகூறும் பாலை யாழின் அமைப்பு...
குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ் வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை; அளைவாழ் அலவன் கண் கண்டன்ன, துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி; எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய்; பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்; மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்; கண் கூடு இருக்கைத் திண் பிணித் திவ்வின் ஆய் திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய நீள் விசித் தொடையல்; மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன, அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி; ஆறு அலை கள்வர் படை விட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை
‘’சி வ ய ந ம ய ந ம சி வ ம சி வ ய ந வ ய ந ம சி ந ம சி வ ய...-2
வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா!
வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.!
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...1
"குளப்பு வழி அன்ன
கவடுபடு பத்தல்
விளக்கு அழல் உருவின்
விசிஉறு பச்சை
எய்யா இளஞ்சூற்
செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவாழ் அலவன் கண் கண்டு
அளைவாழ் அலவன் கண் கண்டு"
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்!
யாழ் கண்டு நாமிங்கு
நாள் கண்டு
கோள் கண்டு
வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா..
உள் கண்டு வெளிகண்டு
உள்ளுக்கும்
உள்கண்டு
உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா..
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்..!
"துளைவாய் தூர்ந்த
துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண் நா இல்லா அமைவரு வறுவாய்
பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின்
ஆய்திணை யரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்".
மேல் அந்து போனாலும்
தோல் வெந்து போனாலும்
சூல் கொண்டு வருவோமே சிவசங்கரா…
நாள் வந்த பின்னந்த
நாள் வந்த பின்னெங்கள்
யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா…
"கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை"…. இன் பாலை....
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்!..
தீ என்று சொன்னாலும்
தீபங்கள் என்றாலும்
தீ என்பதொன்றுதான் சிவசங்கரா!...
நீ என்று சொன்னாலும்
நான் என்று சொன்னாலும்
நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா!..
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...-2
எழுதியவர்- மணிஅமுதவன்.
=====
தமிழில் வழிபடுவோம் .... எல்லா வளம்களையும் பெறுவோம்.....
உங்கள் மொழியில் இயற்கையை / கடவுளை வழிபடுங்கள்.... இல்லையேல் நீங்கள் வளர்ச்சி அடைவது சாத்தியம் இல்லை.... பொய் வழிபாட்டு முறைகளை கைவிடுங்கள் (அவைகள் எல்லாம்....உங்கள் மேல் வியாபாரத்திற்காக திணிக்கப்பட்டது) .... மாறுங்கள் ... வளமுடன் வாழுங்கள்.... கடவுளை வழிபட எவன் துணையும் தேவையில்லை...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.