Thursday, July 7, 2022

Move on



கடந்த பத்து வருடம்களாக தொடர்ந்து இந்த தளத்தில் மார்க்கெட் பற்றிய தகவல்களை பதிந்து வருகிறேன்....

இந்த பதிவுகள்.... யாவும்,  என் அறிவு சார்ந்து, நான் எவ்வளவு மாற்றங்களை கடந்து வந்திருக்கிறேன்,  என பின்னோக்கி சென்று ஆய்வு செய்ய, என் சுய பரிசோதனைக்கான / என் அறிவு சார்ந்த ஆவணங்கள்..... மேலும்.... என்ன என்ன புதிய படிப்பினைகளை கடந்து வந்திருக்கிறேன் என்பதற்கான, எனக்கான சுய பரிசோதனைகளே  கடந்த பத்து வருட பதிவுகளும்......

என் பதிவுகள்.... யாரையும் என்னை பின் தொடருங்கள் என்றோ  / என்னிடத்தில் கற்று கொள்ள வாருங்கள் என்றோ வியாபாரத்தை நோக்கிய பயணம் இல்லை.....   இதுவரை யாரையும் சென்று வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்று அழைத்ததுமில்லை...... இனியும் அப்படியே....  தேவை இருப்பவன் தேடி  வருவான்...... என்பதே இயற்கையின் விதி.... என் தேவைகளுக்கு நான் தேடி செல்வேன்...... 

பணத்திற்காக அறிவை விற்க ஆயிரம் வழிகள் இருக்கிறது...... அது எனக்கு தேவையில்லை என்பதே என் வழி.... எனக்கானது என்னை வந்தடையும்.........

நெடிய பயணம்...... பல கற்றல்கள்.... பல நண்பர்கள் இன்றும் இணைப்பில் பத்து வருடம்களாக....... எனக்கு பல ஆலோசனைகளை வழங்கிய நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி........  

கற்றலுக்கான பதிவுகள் தொடரும்.... learning is a continuous process....let us move forward and be happy....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.